Saturday , February 16 2019
Home / World News

World News

World News

வெனிசுலாவில் நிலநடுக்கம் – மக்கள் பீதி..

வெனிசுலா நாட்டில் நேற்று பின்மதியம் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆகப் பதிவாகியுள்ளது. வெனிசுலா நாட்டில் உள்ள சாண்டியாகோ நகருக்கு அருகில் 4 கி.மீ. தொலைவில் கேரபோவா என்னும் பகுதி உள்ளது. அங்கு நேற்று (வியாழன்) மதியம் 2.29 க்கு அங்கு லேசான நில அதிர்வினை மக்கள் உணர்ந்துள்ளனர். இதனால் மக்கள் உஷாராகி வீடுகளை விட்டு வெட்டவெளிக்கு ஓடியுள்ளனர். ஆனால் இந்த நிலநடுக்கம் வெறும் 6 …

Read More »

இந்தோனேசியா சுனாமி – பலி எண்ணிக்கை 291 ஆக உயர்வு

இந்தோனேசியாவின் சுந்தா ஜலசந்தியில் ஜாவா, சுமத்ரா தீவுகளுக்கு இடையே ஏற்பட்ட சுனாமியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையில் அமைந்துள்ள சுந்தா நீரிணை ஜாவா கடலையும், இந்தியப் பெருங்கடலையும் இணைக்கிறது. இந்த நீரிணையில் அமைந்துள்ள க்ரகடோவா தீவில் இருக்கும் எரிமலை வெடித்ததால், நிலத்துக்கு அடியில் உண்டான சரிவுகள் சுனாமி பேரலைகளை உண்டாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சுமார் 8 மீ அளவுக்கு …

Read More »

இந்தோனேசியாவில் சுனாமி பலி எண்ணிக்கை 222 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா பகுதிகளில் சுற்றுலாவுக்கான பீச்சுகள் மற்றும் கடலோர பகுதிகள் உள்ளன. இந்த நிலையில் இங்கு திடீரென சுனாமி அலைகள் கடுமையாக தாக்கின. இதில் 222 பேர் பலியாகி உள்ளனர். 843 பேர் காயமடைந்து உள்ளனர். 30 பேரை காணவில்லை. இந்த சுனாமியால் 430க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்து உள்ளன. 9 ஓட்டல்கள் மற்றும் 10 கப்பல்களும் சேதமடைந்து உள்ளன. பல இடங்களில் …

Read More »

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமிக்கு 62 பேர் பலி

இந்தோனேசியாவில் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா பகுதிகளில் சுனாமி அலைகள் கடுமையாக தாக்கின. இதில் 62 பேர் பலியாகி உள்ளனர். பலரை காணவில்லை. இதனால் 430க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்து உள்ளன. 9 ஓட்டல்கள் மற்றும் 10 கப்பல்களும் சேதமடைந்து உள்ளன. கிரகட்டோவா என்ற எரிமலை சீற்றத்தினால் இந்த சுனாமி அலைகள் பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என்று தகவல் தெரிவிக்கின்றது. இந்த பலி எண்ணிக்கை உயர கூடும் …

Read More »

ஆப்கானில் இருந்து ராணுவத்தை திரும்ப பெறுகிறதா அமெரிக்கா?

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆப்கானிஸ்தானிலிருந்து தனது நாட்டு ராணுவத்தை திரும்ப பெறுவதற்கு திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் இருக்கும் கிட்டத்தட்ட பாதி அமெரிக்க ராணுவ வீரர்கள், அதாவது 7,000 பேர் அடுத்த சில மாதங்களில் தங்களது நாட்டிற்கு திரும்பலாம் என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் கூறியதாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிரியாவிலிருந்து தனது ராணுவத்தை திரும்ப பெறுவதாக டிரம்ப் அறிவித்த ஒரே நாளில் …

Read More »

எங்கே இருக்கிறார்கள் நித்தி , ரஞ்சிதா? –குழப்பத்தில் சி.பி.ஐ.

நித்யானாந்தா மீது பாலியல் வழக்கின் விசாரணை ஜனவரி 3 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அவர், தலை,மறைவாகியுள்ளதாகத் தெரிகிறது. நித்யானாந்தா மீது பாலியல் வழக்கு ஒன்றின் விசாரணை விரைவில் வரவுள்ள நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தப்பிவிட்டதாக கன்னட சேனல் ஒன்று செய்தி வெளியிட்டது. ஆனால் அவரது பாஸ்போர்ட் காலாவதி ஆகி விட்டதால் அவரால் வெளிநாட்டிற்கு சென்றிருக்க முடியாது என சிபிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வழக்கு விசாரணையில் …

Read More »

சவுதிக்கு ஆயுத உதவியை நிறுத்த அமெரிக்கா தீர்மானம்

பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை சம்பவத்தில் சவுதி அரேபியாவை குற்றஞ்சாட்டும் வகையில், யேமனில் நடந்து வரும் போரில் அந்நாட்டுக்கான ராணுவ உதவியை திரும்ப பெறும் தீர்மானத்திற்கு ஆதரவாக அமெரிக்க செனட் சபை வாக்களித்துள்ளது. அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள 1973 போர் அதிகாரங்கள் சட்டத்தை பயன்படுத்தி நிறைவேற்றப்பட்ட முதல் வாக்கெடுப்பு இதுவாகும்.  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகம், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் சவுதியுடனான உறவு பாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.  இருப்பினும், …

Read More »

ஊழல் இல்லா நாட்டில் ஊழல் செய்து சிக்கிய சீனர்கள்

சரக்கு வாகன ஓட்டுநர்களிடமிருந்து பொருளை ஏற்றி, இறக்குவதற்கு லஞ்சம் பெற்ற இரண்டு சீன குடியேறிகள் மீது சிங்கப்பூரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரிய சரக்கு வாகனங்களில் இருந்து பொருட்களை ஏற்றி, இறக்க பயன்படுத்தப்படும் டிரக்குகளின் ஓட்டுனர்கள் தங்களது பணியை தாமதமின்றி செய்வதற்தாக பலமுறை ஒரு டாலர், அதாவது இந்திய மதிப்பில் 70 ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 47 வயதாகும் சென் ஜிலியாங், 43 வயதாகும் ஜாவோ யுகன் ஆகிய சீன …

Read More »

செவ்வாய் கிரகத்தில் கேட்டது ஒலி ! நாசா புதிய தகவல்

செவ்வாய் கிரகத்தில் இருந்து முதன்முதலாக காற்றின் அதிர்வலை போன்ற ஒலியை கேட்க முடிந்ததாக நாசா தெரிவித்துள்ளது செவ்வாய் கிரகத்தின் ஆழமான உட்புறத்தை ஆய்வு செய்ய நாசாவால் வடிவமைக்கப்பட்ட முதல் ரோபோ விண்கலம் இன்சைட். இதனை கடந்த மே மாதம் 5-ஆம் தேதி நாசா விண்ணில் செலுத்தியது. வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட இன்சைட் விண்கலம் தனது பயணத்தை தொடர்ந்தது. 6 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், நவம்பர் 26-ஆம் தேதி இன்சைட் விண்கலம் …

Read More »

மூடப்படும் ஈபிள் டவர்: காரணம் என்ன?

பிரான்சில் நடைபெற்று வரும் அரசுக்கெதிரான மஞ்சள் ஜாக்கெட் என்னும் போராட்டம் மேலும் தீவிரமாகும் என்ற அச்சத்தால் நாளை (டிசம்பர் 8) ஈபிள் கோபுரம் மூடப்படும் என்று பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. மக்களின் வன்முறை போராட்டத்துக்கு காரணமான எரிபொருள் உயர்வை திரும்ப பெறுவதற்கு பிரான்ஸ் அரசாங்கம் ஒப்புக்கொள்வதாக அறிவித்துவிட்டாலும், அரசாங்கத்தின் மீதுள்ள அதிருப்தியின் காரணமாக மக்களின் போராட்டம் தொடர்கிறது. இதனால், பிரான்ஸ் முழுவதும் 89,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும், …

Read More »