இலங்கையர்களுக்கு இத்தாலிய சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, அமைச்சரவை அனுமதி இன்று (24) முதல் அமுலுக்கு வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தமது சமூக ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய இத்தாலியில் 06 வருடங்களாக வசித்து வரும் இலங்கையர்கள் இத்தாலிய சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற தகுதியுடையவர்கள் என்று அவர் மேலும் கூறினார்.





