கார்த்திகை மாதம் என்பதால் ஐயப்ப சாமி பக்தர்கள் பூஜைக்கு பூக்கள் வாங்குவது வழக்கமாக இருக்கும் நிலையில் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூவரத்து குறைந்து உள்ளதால் பூக்களின் விலை விண்ணை தொட்டுள்ளது
நிலக்கோட்டையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ 4000 ரூபாய்க்கு விற்பனையாகி வருவதாகவும் இதனால் பூ வாங்குபவர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. அதை போல் முல்லை பூ ஒரு கிலோ 1400 ரூபாயும், கனகாம்பரம் ஒரு கிலோ 1000 ரூபாயும், பிச்சிப்பூ ஒரு கிலோ 700 ரூபாய்க்கும் விற்பனை ஆகி வருவதாக கூறப்படுகிறது.
இருப்பினும் இன்னும் சில நாட்களில் பூக்களின் விலை இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





