திமுக மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம் பதில் மனு..!

தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணிக்கு எதிராக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, தேர்தல் ஆணையம் தனது பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது.

தேர்தல் ஆணையம் தனது மனுவில், எஸ்.ஐ.ஆர். பணியானது தகுதியற்ற வாக்காளர்களை நீக்கி, வாக்காளர் பட்டியலில் தூய்மையை பேணவும், சுதந்திரமான தேர்தலை நடத்தவும் அவசியம் என்று வலியுறுத்தியுள்ளது.

மேலும், திமுகவின் மனு விசாரணைக்கு தகுதியற்றது என்றும், “எஸ்.ஐ.ஆர். குறித்து தவறான பிரச்சாரத்தை மேற்கொள்ளும் உள்நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் கடுமையாக விமர்சித்துள்ளது.

எனவே, திமுக தாக்கல் செய்த இந்த மனுவை தக்க அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளது.