முல்லைத்தீவு – வற்றாப்பளை கிராமத்தில் அமைந்துள்ள கண்ணகி அம்மன் ஆலயமும் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த தினங்களாக இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயலால் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளும் பாதிக்கப்பட்டிருந்தன. கடல்நீர் உட்புகுந்தும், வெள்ளப்பெருக்கும் இன்றும் குறையாமல் இருக்கின்றன. இலங்கையில் இதுவரை 202 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திலும் ஆலயத்திற்குள்ளும் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.
இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்
அரசியல் இலாபத்துக்காக மோதல்கள் வேண்டாம் – சஜித்
குறுகிய அரசியல் இலாபத்துக்காக இன–மத மோதல்கள் உருவாவதை தடுக்க வேண்டும். அத்துடன், தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். அமரபுர மகா பீடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் இதனை குறிப்பிட்டார். நாட்டின் ஜனநாயகத்தை நடைமுறையில் பலப்படுத்துவதும், இன–மத நல்லிணக்கத்தை வளர்ப்பதும் அனைவரின் பொறுப்பென அவர் குறிப்பிட்டார். பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பிடத்துடன், பிற மதங்களுக்கும் உரிய பாதுகாப்பும் மரியாதையும் கிடைத்தால், […]
நாட்டின் பல பகுதிகளில் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியம்
நாட்டின் பல பகுதிகளில் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மேல், சபரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று கடுமையான மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கை இன்று இரவு 11.30 மணிவரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
சாரதி அனுமதிப்பத்திரம் குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு
இலங்கையர்களுக்கு இத்தாலிய சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, அமைச்சரவை அனுமதி இன்று (24) முதல் அமுலுக்கு வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தமது சமூக ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய இத்தாலியில் 06 வருடங்களாக வசித்து வரும் இலங்கையர்கள் இத்தாலிய சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற தகுதியுடையவர்கள் என்று அவர் மேலும் கூறினார்.
திருடர்களின் இளவரசரே நாமல் எம்.பி. – அநுர தரப்பு
அரசுக்கு எதிராக நுகேகொடையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேரணியை “அலிபாபாவும் 400 திருடர்களும்” என்று தேசிய மக்கள் சக்தி தரப்பு கடுமையாக விமர்சித்துள்ளது. நாமல் ராஜபக்ஷ எம்.பியைத் திருடர்களின் இளவரசர் என்றும் அநுர தரப்பு விளாசித் தள்ளியுள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இந்த […]
ஜனாதிபதியின் நல்லிணக்க அழைப்பு
அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து,இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ வாய்ப்பை உறுதி செய்வதன் மூலம், இலங்கை எந்தவொரு இனவாத வலையிலும் சிக்குவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். அதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்குமாறும் அவர் அழைப்பு விடுத்தார். எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகளுடன் இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற […]
ஈஸ்டர் தாக்குதல் ஆதாரங்கள் அழிக்கப்பட்டாலும் விரைவில் உண்மையை வெளிக்கொணர்வோம்! – அநுரகுமார
“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்தப் படுகொலைக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொணர்வதை அரசைத் தடுக்காது.” இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், “ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஆதாரங்களின் முக்கிய அறிக்கைகளின் பக்கங்கள் கிழித்தெறியப்பட்டுள்ளன. ஆனால், அரசு ஏற்கனவே புதிய ஆதாரங்களைச் சேகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆதாரங்கள் அழிக்கப்பட்டாலும் உண்மையை வெளிக்கொணர்வோம். சி.ஐ.டி. தலைவர் ஷானி அபேசேகர […]
இதுவே கடைசி, இது போன்ற செயல்கள் இனி இடம்பெறக் கூடாது – ஞானசார தேரர்
புத்தருக்கு சொந்தமான இலங்கை பூமியில்தான் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் மக்கள் வாழுகின்றனர். பௌத்த மக்களின் உரிமையில் தான் நீங்கள் கை வைத்துள்ளீர்கள். இது பௌத்த மதத்தின் உரிமையை கேள்விக்குறியாக்குகிறது. பௌத்த மதம் என்பது பல ஆண்டுகளாக இலங்கையில் உள்ள ஒரு மதமாகும். புத்தர் சிலையை அகற்றுமாறு கலவரம் செய்தவர்களால் தாக்கப்பட்ட பல தேரர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேரர்களை தாக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இது மிகவும் […]
சட்டவிரோத நிறுவனங்களை ஒழிக்க முறையான சட்டம் தேவை – சஜித் பிரேமதாச
அத்தனக்கல்ல பிரதேச செயலகப் பிரிவின் வெலகெதர எனும் கிராமத்தில் ஹிமாயா செவ்வெந்தி என்ற இளம் பெண் இணையவழி கடன் மாபியாவில் சிக்கி, தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பாக அரசாங்கம் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று வியாழக்கிழமை (நவ 13) பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் இவ்விவகாரம் குறித்துப் பேசிய சஜித் பிரேமதாச, பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்தார். இது போன்ற இணையவழி […]
இந்தியாவுக்குச் சட்டவிரோதமாகப் படகில் சென்ற இலங்கையர் கைது
சட்டவிரோதமான முறையில் மன்னாரில் இருந்து படகு மூலம் இந்தியாவின் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியைச் சென்றடைந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று வியாழக்கிழமை (நவம்பர் 13) காலை கைது செய்யப்பட்டுள்ளார். தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் இன்று காலை மரைன் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கடற்கரையில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றுகொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இலங்கையிலிருந்து தனுஷ்கோடி சென்று இறங்கியமை தெரியவந்துள்ளது. […]





