வெனிசுலாவுடனான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க விமான நிறுவனங்களுக்கு ட்ரம்ப் புதிய கட்டளையை பிறப்பித்துள்ளார். அதன்படி வெனிசுலா வான்வெளியை முழுவதுமாக மூடுவது குறித்து பரிசீலிக்குமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். பாதுகாப்பு மோசமடைந்து வருவதாலும், இராணுவ நடவடிக்கைகள் அதிகரிப்பதாலும், வெனிசுலா மீது பறக்கும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் (FAA) விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில் ட்ரம்பின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. போதைப்பொருள் பயங்கரவாதிகளை” எதிர்த்துப் போராடவும், […]
உலக செய்திகள்
உலக செய்திகள்
இந்தோனேசியாவில் தொடரும் சோகம் – 248 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவில் தொடரும் சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 248 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன், 3000 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 78 பேர் காணாமல்போயுள்ளனர். இந்நிலையில் நிலச்சரிவு மற்றம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை சென்றடைவதில் மீட்பு பணியாளர்கள் கடும் சிரமத்தை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் உதவி தேவைப்படுபவர்களை அணுகுவதில் பாரிய சவால்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேற்படி சவாலான […]
ஷேக் ஹசீனாவின் வங்கி பெட்டகத்தில் இருந்து 10 கிலோ தங்கம் பறிமுதல்
பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்குச்(Sheikh Hasina) சொந்தமான வங்கி பெட்டகத்தில்(Locker) இருந்து சுமார் $1.3 மில்லியன் மதிப்புள்ள சுமார் 10 கிலோகிராம் (22 பவுண்டுகள்) தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வங்கதேச(Bangladesh) ஊழல் தடுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செப்டம்பரில் பறிமுதல் செய்யப்பட்ட பெட்டகத்தை திறந்த பிறகு இந்த கண்டுபிடிப்பு நடந்ததாக தேசிய வருவாய் வாரியத்தின் மத்திய புலனாய்வுப் பிரிவின் (CIC) அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், ஹசீனா பதவியில் இருந்தபோது […]
பிரித்தானியாவில் மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு!
பிரித்தானியாவில் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) இன்று தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் அடுத்த ஆண்டு மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு 1500 பவுண்ட்ஸ் சம்பள உயர்வு கிடைக்கப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தொழிலாளர்களுக்கு ஊதியமானது 4.7% சதவீதம் அதிகரித்து ஒரு மணி நேரத்திற்கு £12.71 ஆக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது முழுநேர ஊழியர்களுக்கு […]
ஹெஸ்பொல்லா & ஹமாஸ் மீது இரட்டை எச்சரிக்கை! – நெதன்யாகு
ஹெஸ்பொல்லா தமக்கு எதிராக அதன் அச்சுறுத்தல் திறனை மீண்டும் நிலைநிறுத்துவதைத் தடுக்க தேவையான அனைத்தையும் தொடர்ந்து செய்வோம் என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். “காஸா பகுதியிலும் இதைத்தான் நாங்கள் செய்து வருகிறோம். போர் நிறுத்தத்திற்குப் பிறகு, ஹமாஸ் அதை மீறுவதை நிறுத்தவில்லை, அதன்படி நாங்கள் செயல்படுகிறோம்.” என அவர் குறிப்பிட்டார். இஸ்ரேலிய அமைச்சரவைக் கூட்டத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார். இரண்டு வருடப் போருக்குப் பிறகு, அமெரிக்க […]
பிரான்ஸில் கொடூர செயலில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர் கைது..!
பிரான்ஸில் ஒரு பெண்ணை தவறான முறைக்குட்படுத்தியதாகக் கூறப்படும் இலங்கை தமிழர் ஒருவர் இங்கிலாந்தின் லிவர்பூல் நகர மையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 30 வயதான குறித்த இலங்கையர் சில நாட்களுக்கு முன்னர், தேசிய குற்றவியல் அமைப்பின் நாடுகடத்தல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த இலங்கை நாட்டவர் பிரான்ஸ் அதிகாரிகளால் தேடப்பட்டு வந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் முன்னிலை செய்யப்பட்ட அவரை, நாடு கடத்தல் செயற்பாடுகள் வரை […]
பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை – மோடி
இந்தியா, சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய யூனியன், ஆப்பிரிக்க யூனியன் உள்பட பல்வேறு நாடுகளின் கூட்டமைப்பாக ஜி20 உள்ளது. இதனிடையே, ஜி20 கூட்டமைப்பின் உச்சிமாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகனர்ஸ்பர்க்கில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், ஜி20 உச்சி மாநாட்டின் முதல் அமர்வில் பிரதமர் மோடி பங்கேற்றார். உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது, அனைவரையும் உள்ளடக்க்கிய […]





