பஹ்ரைனில் இருந்து ஹைதராபாத் வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் விமானம் மும்பைக்கு திருப்பி விடப்பட்டது.
பஹ்ரைனில் இருந்து ஹைதராபாத் வந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்திருக்கிறது.
இதைத்தொடர்ந்து அந்த விமானம் மும்பைக்கு திருப்பி விடப்பட்டு பாதுகாப்பாக தரையிறங்கியது.
உடனே அந்த விமானம் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஆனால் அதில் சந்தேகத்திற்குரிய பொருள்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
எனவே, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.





