‘வாட்டர் மெலன் ஸ்டார்’ திவாகர் கைது!

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ‘வாட்டர் மெலன் ஸ்டார்’ திவாகர், யூடியூபர் ஒருவரை மிரட்டி பணம் கேட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யூடியூபர் ஒருவர் அளித்த முறைப்பாட்டில், திவாகர் தன்னிடம் இந்திய மதிப்பில் ரூ.1 இலட்சம் பணம் கேட்டு மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், திவாகர் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து, அவரை கைது செய்த கீழ்ப்பாக்கம் காவல்துறையினர், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.