நடிகை ப்ரீத்தி முகுந்தனின் அழகின் ரகசியம் இதுதான்!

‘முட்டு’, ‘ஆச கூட’ போன்ற ஆல்பம் பாடல்கள் மூலம் பிரபலமான நடிகை ப்ரீத்தி முகுந்தன், கவினின் ‘ஸ்டார்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தில் ஆக்‌ஷன் நாயகியாக நடித்து கவனமீர்த்த இவர், தற்போது ‘இதயம் முரளி’ படத்தில் நடித்து வருகிறார்.

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான ப்ரீத்தி முகுந்தன், தனது அழகின் ரகசியம் குறித்துப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “நல்ல தூக்கம், போதுமான அளவு தண்ணீர் அருந்துவது மற்றும் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது ஆகியவையே எனது அழகுக்கும் ஆரோக்கியத்திற்கும் காரணம்.

நல்ல வாழ்க்கைக்குத் தூக்கம் மிகவும் அவசியம்; எனவே, எப்போதுமே தூக்கத்தை இழக்காதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.