லாட்டரி டிக்கெட் விற்ற தவெக நிர்வாகி கைது

தூத்துக்குடியில் ஆன்லைன் லாட்டரி டிக்கெட் விற்பனையில் ஈடுபட்ட தவெக நிர்வாகி ராம்குமார் என்பவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ஆன்லைன் விற்பனைக்காகப் பயன்படுத்தப்பட்ட செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி தவெக தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.