நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நடைபெறும் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க, தவெக அழைப்பு விடுக்கப்படவில்லை. தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களை எம்.பி. கொண்டுள்ள கட்சிகளுக்கு மட்டுமே இந்த முதற்கட்ட கூட்டத்திற்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், கூட்டணியின் அடுத்தடுத்த கூட்டங்களில் தவெகவை அழைப்பது குறித்து முறைப்படி ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு செய்திகள்
தமிழ்நாடு செய்திகள்
லாட்டரி டிக்கெட் விற்ற தவெக நிர்வாகி கைது
தூத்துக்குடியில் ஆன்லைன் லாட்டரி டிக்கெட் விற்பனையில் ஈடுபட்ட தவெக நிர்வாகி ராம்குமார் என்பவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ஆன்லைன் விற்பனைக்காகப் பயன்படுத்தப்பட்ட செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி தவெக தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆபாச கமெண்ட்… இளைஞருடன் நடிகை குஷ்பு வார்த்தை மோதல்
நடிகை த்ரிஷா தனது X பக்கத்தில் Double Occupancy என்ற படத்தில் ட்ரைலரை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு ரசிகர் ஒருவர் ஆபாசமாக கமெண்ட் செய்திருந்தார். அந்த கமெண்ட்டிற்கு பதிலளித்த நடிகை குஷ்பு, “ஒரு அப்பனுக்கு பிறந்திருந்த உன்னோட முகம் காட்டு, உன்னோட பேர் என்ன என கேட்டிருந்தார்.” அதற்கு அந்த இளைஞரும் மிகவும் மோசமான வார்த்தைகளால் பதிலளித்திருந்தார். மேலும் விடாமல் நடிகை குஷ்பு அந்த இளைஞருடன் வார்த்தை மோதலில் […]
இந்தியா கூட்டணி ஆலோசனையில் பங்கேற்ற திருமா, வைகோ
டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது. இக்கூட்டத்தை திமுக ஏற்கனவே புறக்கணிப்பதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது ஆம் ஆத்மி கட்சியும் புறக்கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், இக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், வைகோ மற்றும் திருமாவளவன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
முதல்வர் ஜோசப் விஜய்யை தோற்கடித்த பிரக்ஞானந்தா
நார்வே செஸ் தொடரை வென்று சாதனை படைத்த பிரக்ஞானந்தா, தமிழக முதல்வர் விஜய்யைச் சந்தித்த பின் பேட்டியளித்துள்ளார். அப்போது, “CM விஜய் செஸ் போர்டு எடுத்து வரக் கூறினார். அவர் என்னுடன் நன்றாகச் செஸ் விளையாடினார். அந்த விளையாட்டில் நான்தான் வெற்றி பெற்றேன்” எனக் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். மேலும் அவருக்கு 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. நார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பிரக்ஞானந்தாவையே […]
திமுக மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம் பதில் மனு..!
தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணிக்கு எதிராக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, தேர்தல் ஆணையம் தனது பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது. தேர்தல் ஆணையம் தனது மனுவில், எஸ்.ஐ.ஆர். பணியானது தகுதியற்ற வாக்காளர்களை நீக்கி, வாக்காளர் […]
ஒரு கிலோ மல்லிகைப்பூ 4000 ரூபாய்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!
கார்த்திகை மாதம் என்பதால் ஐயப்ப சாமி பக்தர்கள் பூஜைக்கு பூக்கள் வாங்குவது வழக்கமாக இருக்கும் நிலையில் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூவரத்து குறைந்து உள்ளதால் பூக்களின் விலை விண்ணை தொட்டுள்ளது நிலக்கோட்டையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ 4000 ரூபாய்க்கு விற்பனையாகி வருவதாகவும் இதனால் பூ வாங்குபவர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. அதை போல் முல்லை பூ ஒரு கிலோ 1400 ரூபாயும், கனகாம்பரம் ஒரு கிலோ 1000 ரூபாயும், […]
டிட்வா புயல்: சென்னை மாநகராட்சியின் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?
வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயலை எதிர்கொள்ள, பெருநகர சென்னை மாநகராட்சி தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், மொத்தம் 215 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் உணவு வழங்க 110 சமையல் கூடங்கள் தயாராக உள்ளன; இன்று மட்டும் 32,500 நபர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. முதியோர் மற்றும் குழந்தைகளுக்காக ஒரு இலட்சம் பால் பவுடர் மற்றும் ஒரு இலட்சம் நிவாரண தொகுப்புகள் […]
அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்: தினகரன்
அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தபோது, மத்திய, மாநில அரசுகளை விமர்சித்தார். மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி தராமல் இருப்பது ‘காழ்ப்புணர்ச்சி’ காரணமாக இருக்கலாம். போக்குவரத்து நெரிசலை குறைக்க, இத்திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நெல் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், விவசாயிகளின் நலன் கருதி, 22% ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு ஒப்புக்கொள்ள […]
செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி
வாக்காளர் சிறப்பு சீர்திருத்தம் என்கிற பெயரில் வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணி ஆளும் பாஜக அரசால் சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் துவங்கப்பட்டது. மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு திமுக அரசு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், நீதிமன்றம் சென்றும் பலன் அளிக்கவில்லை. தற்போது தமிழகத்தில் பலரும் SIR விண்ணப்பத்தை நிரப்பி கொடுத்து விட்டனர், இன்னும் தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது. ஒருபக்கம் இந்த திட்டத்தை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. […]





