திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை வைத்து எந்த தரப்பினருக்கும் அரசியல் இலாபம் ஈட்டுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது. நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதற்காகவே காவல்துறை உள்ளது. இந்த சம்பவத்தில் குறித்த இடத்தில் தற்காலிகமாக சிற்றுண்டிச்சாலையொன்றை நிர்மாணிக்க செல்ல சில காலம், சில கட்டுப்பாடு மற்றும் அளவுகோல்களின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. குறித்த கட்டுப்பாடுகளை மீறியமை தொடர்பில் அந்த கட்டடத்தை இடிப்பதற்கான உத்தரவொன்றும் உள்ள நிலையிலேயே அங்கு புத்தர் சிலையொன்றும் […]
Other News
இதுவே கடைசி, இது போன்ற செயல்கள் இனி இடம்பெறக் கூடாது – ஞானசார தேரர்
புத்தருக்கு சொந்தமான இலங்கை பூமியில்தான் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் மக்கள் வாழுகின்றனர். பௌத்த மக்களின் உரிமையில் தான் நீங்கள் கை வைத்துள்ளீர்கள். இது பௌத்த மதத்தின் உரிமையை கேள்விக்குறியாக்குகிறது. பௌத்த மதம் என்பது பல ஆண்டுகளாக இலங்கையில் உள்ள ஒரு மதமாகும். புத்தர் சிலையை அகற்றுமாறு கலவரம் செய்தவர்களால் தாக்கப்பட்ட பல தேரர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேரர்களை தாக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இது மிகவும் […]
பசில் ராஜபக்சவுக்கு நவ. 21இல் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நிறுவனர் பசில் ராஜபக்ச, சட்டவிரோதமாகப் பெறப்பட்ட ரூ. 50 மில்லியன் நிதியைப் பயன்படுத்தி நிலத்தை சட்டவிரோதமாகக் கையகப்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக, எதிர்வரும் நவம்பர் 21 வெள்ளிக்கிழமை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும். கடந்த மே மாதம் நடந்த வழக்கு விசாரணையின் போது, பசில் ராஜபக்சவின் சட்டக் குழு, அவர் நாற்காலியில் இருந்து விழுந்ததைத் தொடர்ந்து முதுகுத்தண்டு மற்றும் நரம்பு சிக்கல்களுக்கு அமெரிக்காவில் […]
பௌத்தத்தை அழித்து ஈழம் அமைக்கிறதா அரசாங்கம்? – அம்பிட்டிய சுமனரத்ன தேரர் ஆவேசம்!
திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக நிறுவப்பட்ட புத்தர் சிலையை அகற்றியமை தொடர்பாக, அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அவர்கள் அரசாங்கத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளையும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அம்பிட்டிய சுமனரத்ன தேரர், அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்தார். “வடக்கு மற்றும் கிழக்கில் பௌத்த தர்மத்தை அழித்து ஈழத்தை நிறுவுவதன் மூலம் புலம்பெயர்ந்தோர் செய்ய விரும்புவதைச் செய்யும் ஒரு அரசாங்கம் தற்போது ஆட்சியில் இருக்கிறது.” தர்ம இலட்சினையுடைய புத்தர் சிலையை […]
சட்டவிரோத நிறுவனங்களை ஒழிக்க முறையான சட்டம் தேவை – சஜித் பிரேமதாச
அத்தனக்கல்ல பிரதேச செயலகப் பிரிவின் வெலகெதர எனும் கிராமத்தில் ஹிமாயா செவ்வெந்தி என்ற இளம் பெண் இணையவழி கடன் மாபியாவில் சிக்கி, தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பாக அரசாங்கம் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று வியாழக்கிழமை (நவ 13) பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் இவ்விவகாரம் குறித்துப் பேசிய சஜித் பிரேமதாச, பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்தார். இது போன்ற இணையவழி […]
இந்தியாவுக்குச் சட்டவிரோதமாகப் படகில் சென்ற இலங்கையர் கைது
சட்டவிரோதமான முறையில் மன்னாரில் இருந்து படகு மூலம் இந்தியாவின் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியைச் சென்றடைந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று வியாழக்கிழமை (நவம்பர் 13) காலை கைது செய்யப்பட்டுள்ளார். தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் இன்று காலை மரைன் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கடற்கரையில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றுகொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இலங்கையிலிருந்து தனுஷ்கோடி சென்று இறங்கியமை தெரியவந்துள்ளது. […]
வவுனியாவில் போதை மாத்திரைகளுடன் நான்கு இளைஞர்கள் கைது!
போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் இன்று தெரிவித்தனர். வவுனியா மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த விசேட தகவலையடுத்து வவுனியாவின் பல்வேறு இடங்ளில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 4 இளைஞர்கள் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 150 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டுளள்ளன. அந்தவகையில், திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரிடம் இருந்து 80 […]
சங்குக் கூட்டணியுடன் பேச தமிழரசு அழைப்பு!
தமிழ்த் தேசியக் கட்சிகளின் இணைந்த செயற்பாட்டைக் கருத்தில்கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் கலந்துரையாடலை நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்துக்கமைய அந்தக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயலாளர் நா.இரட்ணலிங்கத்துக்குக் கடிதம் மூலம் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். தமிழினம் சார்ந்த பல பொது விடயங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையின்மை […]
அநுர அரசின் பயணம் சிறப்பு – பொன்சேகா
“இலங்கையில் கடந்த கால அரசுகள் பயணித்ததைவிட தற்போதைய அரசின் பயணம் சிறப்பாக உள்ளது.” இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “தேசிய மக்கள் சக்தி அரசு, ஊழல்வாதிகள் மற்றும் மோசடியாளர்களுக்கு இடமளிக்கப்படவில்லை என்பதை நாம் ஏற்றாக வேண்டும். அதேபோல ஊழல் வலையமைப்பை முற்றாக இல்லாதொழிப்பதற்கு இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். ஆனால் அதற்குரிய […]





