பஹ்ரைனில் இருந்து ஹைதராபாத் வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் விமானம் மும்பைக்கு திருப்பி விடப்பட்டது. பஹ்ரைனில் இருந்து ஹைதராபாத் வந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்திருக்கிறது. இதைத்தொடர்ந்து அந்த விமானம் மும்பைக்கு திருப்பி விடப்பட்டு பாதுகாப்பாக தரையிறங்கியது. உடனே அந்த விமானம் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஆனால் அதில் சந்தேகத்திற்குரிய பொருள்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, […]
Other News
வடக்கின் அபிவிருத்திக் கோரிக்கைகளை சாதகமாகவே பரிசீலித்து வரும் அநுர அரசு – வேதநாயகன் தெரிவிப்பு
“வடக்கின் அபிவிருத்தி சார்ந்து எம்மால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளைத் தற்போதைய அரசாங்கம் மிகவும் சாதகமாகவே பரிசீலித்து வருகின்றது. எனவே, இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தி, விளையாட்டுத் துறைக்குத் தேவையான வளங்களைப் பெற்று, எமது வீரர்கள் சர்வதேச அரங்கில் மிளிர வேண்டும்.” இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள யாழ்ப்பாணம் மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நடும் […]
திருடர்களின் இளவரசரே நாமல் எம்.பி. – அநுர தரப்பு
அரசுக்கு எதிராக நுகேகொடையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேரணியை “அலிபாபாவும் 400 திருடர்களும்” என்று தேசிய மக்கள் சக்தி தரப்பு கடுமையாக விமர்சித்துள்ளது. நாமல் ராஜபக்ஷ எம்.பியைத் திருடர்களின் இளவரசர் என்றும் அநுர தரப்பு விளாசித் தள்ளியுள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இந்த […]
ஹெஸ்பொல்லா & ஹமாஸ் மீது இரட்டை எச்சரிக்கை! – நெதன்யாகு
ஹெஸ்பொல்லா தமக்கு எதிராக அதன் அச்சுறுத்தல் திறனை மீண்டும் நிலைநிறுத்துவதைத் தடுக்க தேவையான அனைத்தையும் தொடர்ந்து செய்வோம் என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். “காஸா பகுதியிலும் இதைத்தான் நாங்கள் செய்து வருகிறோம். போர் நிறுத்தத்திற்குப் பிறகு, ஹமாஸ் அதை மீறுவதை நிறுத்தவில்லை, அதன்படி நாங்கள் செயல்படுகிறோம்.” என அவர் குறிப்பிட்டார். இஸ்ரேலிய அமைச்சரவைக் கூட்டத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார். இரண்டு வருடப் போருக்குப் பிறகு, அமெரிக்க […]
உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே கசிந்தமை தொடர்பில் விசாரணை
இந்த வருடத்திற்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பொருளியல் பாடத்திற்கான வினாத்தாள், பரீட்சைக்கு முன்னரே கசிந்ததாகக் கூறப்படுவது தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்தி சேவைக்குக் குறிப்பிட்டார். இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அத்துடன், இந்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடமும் முறையிடப்பட்டுள்ளது
ஆண்ட்ரியாவின் வீடு பத்திரமாக இருக்கும் என நம்புகிறேன் – கவின்
கவின் மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘மாஸ்க்’ படத்தை விகர்ணன் அசோக் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். ஆண்ட்ரியாவும் அவரின் மேலாளர் எஸ் பி சொக்கலிங்கமும் இணைந்து இந்த படத்தைத் தயாரிக்கிறார்கள். வெற்றிமாறன் இந்த படத்தின் படைப்பு ஆலோசகராகவும் வழங்குபவராகவும் செயல்படுகிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படம் நேற்று ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில் ‘மாஸ்க்’ படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய […]
பிரான்ஸில் கொடூர செயலில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர் கைது..!
பிரான்ஸில் ஒரு பெண்ணை தவறான முறைக்குட்படுத்தியதாகக் கூறப்படும் இலங்கை தமிழர் ஒருவர் இங்கிலாந்தின் லிவர்பூல் நகர மையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 30 வயதான குறித்த இலங்கையர் சில நாட்களுக்கு முன்னர், தேசிய குற்றவியல் அமைப்பின் நாடுகடத்தல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த இலங்கை நாட்டவர் பிரான்ஸ் அதிகாரிகளால் தேடப்பட்டு வந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் முன்னிலை செய்யப்பட்ட அவரை, நாடு கடத்தல் செயற்பாடுகள் வரை […]
இந்திய வம்சாவளி மேயரை புகழ்ந்த டிரம்ப்
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக இருந்தவர் எரிக் ஆடம்ஸ். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. எனவே எரிக் ஆடம்ஸ் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய மேயரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்றது. அதில் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியான ஜோஹ்ரான் மம்தானியும் (வயது 34), குடியரசு கட்சி வேட்பாளர் கர்டிஸ் ஸ்லிவாவும் முன்னிலை வகித்து வந்தனர். மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றான நியூயார்க் […]
பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை – மோடி
இந்தியா, சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய யூனியன், ஆப்பிரிக்க யூனியன் உள்பட பல்வேறு நாடுகளின் கூட்டமைப்பாக ஜி20 உள்ளது. இதனிடையே, ஜி20 கூட்டமைப்பின் உச்சிமாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகனர்ஸ்பர்க்கில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், ஜி20 உச்சி மாநாட்டின் முதல் அமர்வில் பிரதமர் மோடி பங்கேற்றார். உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது, அனைவரையும் உள்ளடக்க்கிய […]
சென்னைக்கு ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது
ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக தனிப்படை போராருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சென்ட்ரல் வந்த ரெயில் பயணிகளை கண்காணித்தனர். அப்போது எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த அண்ணாமலை(33) என்பலர் ஆந்திர மாநிலத்தில் இருந்து ரூ.37ஆயிரம் கொடுத்து 5 கிலோ கஞ்சாலை வாங்கி கடத்தி வந்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர். அவரிடம் […]





