Other News

ஜனாதிபதியின் நல்லிணக்க அழைப்பு

ஜனாதிபதியின் நல்லிணக்க அழைப்பு

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து,இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ வாய்ப்பை உறுதி செய்வதன் மூலம், இலங்கை எந்தவொரு இனவாத வலையிலும் சிக்குவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். அதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்குமாறும் அவர் அழைப்பு விடுத்தார். எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகளுடன் இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற […]

கவினின் நடிப்பிற்கு இவ்வளவு தான் வரவேற்பா.?

கவினின் நடிப்பிற்கு இவ்வளவு தான் வரவேற்பா.?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் கவின், அதன் பிறகு தேர்ந்தெடுத்த திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்கி வருகிறார். லிப்ட், டாடா, ஸ்டார் போன்ற படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. ஆனால் சமீபத்தில் வெளியான ‘பிளடி பெக்கர்’ எதிர்பார்த்த அளவுக்கு சாதனையைப் படைக்கவில்லை. இப்படத்திற்குப் பின் கவின் நடிப்பில் வெளியாகியுள்ள புதிய படம் ‘மாஸ்க்’, இன்று நவம்பர் 21, 2025 திரையரங்குகளில் […]

வாட்டர் மெலன் ஸ்டார் திவாகருக்கு திருமணம் ஆகிடுச்சா..?

வாட்டர் மெலன் ஸ்டார் திவாகருக்கு திருமணம் ஆகிடுச்சா..?

சூர்யா நடிப்பில் வெளியான கஜினி படத்தின் வாட்டர் மெலன் காட்சியை ரீல்ஸாக செய்து வெளியிட்டதன் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்தான் திவாகர். இவர் டாக்டராக காணப்பட்ட போதும் நடிப்பின் மூலமாகவே மக்கள் மத்தியில் அறியப்பட்டார். தன்னைத் தானே நடிப்பு அரக்கர் என பெருமை பேசும் திவாகர், நாளடைவில் ஏனைய நடிகர்களை மட்டம் தட்டி பேச ஆரம்பித்தார். அதன்படி சூரி பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்டார் . இதைத்தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத […]

திவ்யாவை வெளுத்து வாங்கிய விஜய் சேதுபதி

திவ்யாவை வெளுத்து வாங்கிய விஜய் சேதுபதி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 9 தற்போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு முன்னர் 7 சீசன்களையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியிருந்தாலும், தற்பொழுது விஜய் சேதுபதி நடுவராக வந்து, நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டியுள்ளார். மெதுவாக பேசுபவர், அமைதியாக விஷயங்களை புரியவைக்கும் நபர் என்று அந்த நடிகரின் ஸ்டைலை ரசிகர்கள் மிகவும் ரசித்து வருகின்றனர். ஆனால், தற்பொழுது அவர் காட்டிய அதிரடி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று […]

நாணய சுழற்சியை வென்றது இலங்கை

நாணய சுழற்சியை வென்றது இலங்கை

பாகிஸ்தானில் இடம்பெற்றுவரும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. குறித்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் மோதவுள்ளன. இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இந்தநிலையில் இன்றைய போட்டியில் விஜயகாந்த் வியாஸ்காந்த் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈஸ்டர் தாக்குதல் ஆதாரங்கள் அழிக்கப்பட்டாலும் விரைவில் உண்மையை வெளிக்கொணர்வோம்! – அநுரகுமார

ஈஸ்டர் தாக்குதல் ஆதாரங்கள் அழிக்கப்பட்டாலும் விரைவில் உண்மையை வெளிக்கொணர்வோம்! – அநுரகுமார

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்தப் படுகொலைக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொணர்வதை அரசைத் தடுக்காது.” இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், “ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஆதாரங்களின் முக்கிய அறிக்கைகளின் பக்கங்கள் கிழித்தெறியப்பட்டுள்ளன. ஆனால், அரசு ஏற்கனவே புதிய ஆதாரங்களைச் சேகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆதாரங்கள் அழிக்கப்பட்டாலும் உண்மையை வெளிக்கொணர்வோம். சி.ஐ.டி. தலைவர் ஷானி அபேசேகர […]

ஜனாதிபதி – தமிழரசு இன்று முக்கிய சந்திப்பு!

ஜனாதிபதி – தமிழரசு இன்று முக்கிய சந்திப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் இன்று புதன்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துப் பேசவுள்ளனர். இந்தச் சந்திப்பு இன்று மதியம் ஒரு மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். இந்தச் சந்திப்பில், தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வுடன் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிற பிரச்சினைகள், வடக்கு, கிழக்கு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் பேசப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதில், இலங்கைத் தமிழரசுக் […]

புத்தர் சிலை விவகாரத்தை வைத்து எந்த தரப்பினருக்கும் அரசியல் இலாபம் ஈட்டுவதற்கு அரசாங்கம் இடமளிக்காது – நளிந்த ஜயதிஸ்ஸ

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை வைத்து எந்த தரப்பினருக்கும் அரசியல் இலாபம் ஈட்டுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது. நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதற்காகவே காவல்துறை உள்ளது. இந்த சம்பவத்தில் குறித்த இடத்தில் தற்காலிகமாக சிற்றுண்டிச்சாலையொன்றை நிர்மாணிக்க செல்ல சில காலம், சில கட்டுப்பாடு மற்றும் அளவுகோல்களின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. குறித்த கட்டுப்பாடுகளை மீறியமை தொடர்பில் அந்த கட்டடத்தை இடிப்பதற்கான உத்தரவொன்றும் உள்ள நிலையிலேயே அங்கு புத்தர் சிலையொன்றும் […]

இதுவே கடைசி, இது போன்ற செயல்கள் இனி இடம்பெறக் கூடாது - ஞானசார தேரர்

இதுவே கடைசி, இது போன்ற செயல்கள் இனி இடம்பெறக் கூடாது – ஞானசார தேரர்

புத்தருக்கு சொந்தமான இலங்கை பூமியில்தான் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் மக்கள் வாழுகின்றனர். பௌத்த மக்களின் உரிமையில் தான் நீங்கள் கை வைத்துள்ளீர்கள். இது பௌத்த மதத்தின் உரிமையை கேள்விக்குறியாக்குகிறது. பௌத்த மதம் என்பது பல ஆண்டுகளாக இலங்கையில் உள்ள ஒரு மதமாகும். புத்தர் சிலையை அகற்றுமாறு கலவரம் செய்தவர்களால் தாக்கப்பட்ட பல தேரர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேரர்களை தாக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இது மிகவும் […]

பசில் ராஜபக்சவுக்கு நவ. 21இல் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நிறுவனர் பசில் ராஜபக்ச, சட்டவிரோதமாகப் பெறப்பட்ட ரூ. 50 மில்லியன் நிதியைப் பயன்படுத்தி நிலத்தை சட்டவிரோதமாகக் கையகப்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக, எதிர்வரும் நவம்பர் 21 வெள்ளிக்கிழமை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும். கடந்த மே மாதம் நடந்த வழக்கு விசாரணையின் போது, பசில் ராஜபக்சவின் சட்டக் குழு, அவர் நாற்காலியில் இருந்து விழுந்ததைத் தொடர்ந்து முதுகுத்தண்டு மற்றும் நரம்பு சிக்கல்களுக்கு அமெரிக்காவில் […]